வெள்ளி, 24 ஜூன், 2011

1000 கோடிக்கணக்கில் உலக வங்கியின் மான்யம்


உலக வங்கியின் மாசுகளை உருவாக்காமல், கழிவு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலக வங்கி, "கார்பன் கிரெடிட்' அடிப்படையில் மானியம் வழங்குகிறது.
தமிழகத்தில், வறண்ட பகுதிகளில் வளரும் சீத்தமுள்ளு தாவரத்தை கொண்டு,  100 முதல், 200 யூனிட் வரை பயோமாஸ் மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கி ஆண்டுக்கு, 2,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி கிடைக்க செய்யலாம்.உலக வங்கியின் மான்யமும் கிடைக்கும்.
இதேபோல், தெர்மல் ஸ்டேஷன்களில் இருந்து, 20 சதவிகித சாம்பலை சிறு தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என உள்ள  சட்டத்தினை முறையாக அமல்படுத்தினால், எரிபொருள் தேவையே இல்லாமல் உலர் சாம்பல் கற்களை தயாரித்து உலக வங்கியிடம் இருந்து, 2,000 கோடி வரை மானியம் பெற முடியும். இதனால் தமிழகத்தில், ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் அன்னிய செலவாணி வருமானமும். கட்டுமான பொருட்களின் விலைக்குறைவும் மண் வளம் பாதுகாப்பும் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக